இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளன.