Breaking News

மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தினால் தூய பசும்பால் விற்பனை நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தினால் தூய பசும்பால் விற்பனை நிலையம் நேற்று  திறந்து வைக்கப்பட்டது .
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தினால்  தூய பசும்பால் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண விவசாய ,கால்நடை அபிவிருத்தி மீன்பிடித்துறை ,நீர்பாசன ,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு சங்க  தலைவர்  த .இராஜேந்திரன் தலைமையில் கிழக்கு மாகாண விவசாய ,கால்நடை அபிவிருத்தி மீன்பிடித்துறை ,நீர்பாசன ,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கே . துரைராசசிங்கம் அமைச்சரினால் இன்று தூய பசும்பால் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தியினையும்,  வாழ்வாதாரத்தையும்   ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையத்தின்  ஊடாக குளீருடப்பட்ட மற்றும் சூடான தூய பசும்பால் ,நெய் ,மோர் ,தயிர் போன்ற வற்றை துய்மையான முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது ..

இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர்  இந்திரகுமார் பிரசன்னா ,மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவு பொதுமுகாமையாளர் , பல நோக்குக் கூட்டுறவு  பணிப்பாளர் மற்றும் பல நோக்குக் கூட்டுறவு அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து


(அமிர்தகழி நிருபர் )