Breaking News

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கரையோர வளங்களை பாதுகாத்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான சட்ட ஆலோசனை

மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கரையோர வளங்களை பாதுகாத்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான  சட்ட ஆலோசனை வழங்கும் ஒருநாள் செயலமர்வு இன்று இடம்பெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சுடன் இனைந்து மாவட்ட கரையோர வளங்களை பாதுகாத்தல் தொடர்பாக சட்ட ஆலோசனைகள்  மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு  வழங்கும் செயலமர்வு மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்கள மாவட்ட செயல்திட்ட இணைப்பாளர் எ .கோகுலதீபன் தலைமையில் இன்று மட்டக்களப்பு லங்கா விடுதியில் இடம்பெற்றது .

கரையோர பாதுகாப்பு திணைகளத்தின் ஊடாக கரையோரங்களை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு சட்ட விரோதமாக கரையோர நடவடிக்கைகளான கண்டல்  தாவரங்கள் , கண்ணா மரங்கள்  போன்ற கடல் தாவரங்கள் அகற்றபடுகின்றமை ,சட்ட விரோத மீன்பிடி , சட்டத்திற்கு முரனான கட்டிடங்கள் அமைத்தல் , சட்ட விரோத மணல் அகழ்வு போன்ற பல்வேறு சட்ட விரோத செயல் பாடுகளை மேற்கொள்வோருக்கான  பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாவட்ட பொலிஸ் திணைக்களங்கள்  ஊடாக மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு சட்டம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது .

இச்செயல் அமர்வில் வளவாளராக  மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்கள சட்ட உத்தியோகத்தர் திருமதி .பாஞ்சாலி பெனாண்டோ ,மட்டக்களப்பு மாவட்ட ( DIG)  யு ,கே . திசாநாயக , மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அதிகாரி  ( SP) ஜயசிங்க ,மட்டக்களப்பு ASP  அனுருத்த லக்மன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்


(அமிர்தகழி நிருபர் )