Breaking News

மனைவி மீது சந்தேகம்: அரை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் செல்ல வைத்த கணவன்

சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்தவர்  ஷாங் (வயது 39).  இவரது மனைவி வாங் நி (வயது 33).  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஷாங் பக்கத்து நகரத்தில் உள்ள  சொத்து வளர்ச்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஷாங் தங்களது 10 வருட வாழ்க்கையில் ஆண் குழந்தை இல்லை என்று கவலை அடைந்து இருந்தார்.  இதனால் மனைவியை அடிக்கடி திட்டியும் அடித்து  வந்தார். கணவ்ன் மனைவி தகராறால் ஷாங் வீட்டுக்கு எப்போதாவது தான் வந்து செல்ல தொடங்கினார். மேலும் குடிக்கவும் தொடங்கினார். இதனால்  அவரது மனைவி வாங் நிக்கும் மற்றொரு ஆணுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்களது வீட்டை சுற்றி வதந்தி பரவியது.

ஒரு நாள் குடித்து விட்டு  கோபத்துடன் வந்த ஷாங் மனைவியை அடித்து உதைத்தார். தனக்கு துரோகம் செய்து விட்டதாக மனைவியை குற்றம் சாட்டினார்.  பின்னர் அவரை அரை நிர்வாணமாக்கினார்.  இருந்தும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை.

மனைவியின் கையில் ஒரு அட்டையில், ”நான் எனது  உடலை விற்க விரும்புகிறேன்” (ஈ நன்ட் டொ செல்ல் ம்ய் பொட்ய்) என எழுதி அவரை வீதி முழுவதும் வலம் வர வைத்தார். இதை விட கொடுமை ஷாங் தனது காரில்  மனைவியை பின் தொடர்ந்து வந்து வேறு பார்வையிட்டார்.

இதை பார்த்த போலீஸ் அதிகாரி, பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.  விசாரணைக்கு கணவர் ஷாங்கை அழைத்தார். விசாரணையில் ஷாங்கின் மனைவி  தவறாக நடக்கவில்லை என்றும் அது வெறும் ஆதாரம் இல்லாத வதந்தி தான் என்றும் தெரிய வந்தது.  

இதை தொடர்ந்து ஷாங்  மனைவி வாங்கிடம் மன்னிப்பு கோரினார்.  ஆனால் அவரது மன்னிப்பை மனைவி ஏற்று கொண்டாரா என தெரியவில்லை.