Breaking News

வாய் துர்­நாற்றத்தை தவிர்க்க சில எளிய முறைகள்.

உலகில் பெரும்­பா­லானவர்கள் சந்திக்கும் மிகப்­பெ­ரிய ஒரு தர்மசங்கட­மான ஓர் நிலை தான் வாய் துர்­நாற்றம். இப்­பி­ரச்­சினை உள்ளவர்களால் மற்­ற­வர்­க­ளுடன் நிம்ம­தி­யாக பேச முடி­யாது. யாரு­டனும் சக­ஜ­மாக பழக முடி­யாது. தங்கள் மீது ஓர் அசெ­ள­க­ரிய உணர்வை உணர்வார்கள். அதில் குறிப்­பாக ஆண்கள் இப்பிரச்­ச­னையால் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. இதற்கு அவர்­களின் முறை­யற்ற பரா­ம­ரிப்பு தான் காரணம். பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்­கறை கொண்­டி­ருக்கும் அளவில் ஆண்கள் தம்மீது அக்கறை கொள்வதில்லை. ஆம் இந்த வாய் துர்நாற்றத்தலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்

புதினா இலைகள் வாய் துர்­நாற்­றத்தைப் போக்க உதவும் பொருட்­களில் மிகவும் சிறந்­தது. புதினா வாயை புத்­து­ணர்ச்­சி­யுடன் வைத்திருக்கும். இதற்கு அதில் உள்ள குளோ­ரோபில் தான் முக்­கிய காரணம். எனவே அவ்­வப்­போது புதினா இலை­களை வாயில் போட்டு மெல்­லுங்கள்.

வாய் துர்­நாற்றம் அதிகம் உள்ள ஆண்கள் எந்த ஒரு உணவை உட்­கொண்ட பின்­னரும் உப்பு நீரினால் வாயைக் கொப்­ப­ளிக்க வேண்டும். இதனால் உப்பு நீரா­னது வாயில் உள்ள பக்­டீ­ரி­யாக்கள் மற்றும் உண­வுத்­து­கள்­களை முற்­றிலும் பல்­லி­டுக்­கு­களில் இருந்து வெளி­யேற்­றி­விடும். இல்­லா­விட்டால், தினமும் காலை மற்றும் இரவில் 1 டம்ளர் வெது­வெ­துப்­பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்­நீரைக் கொண்டு வாயைக் கொப்­ப­ளிக்க வேண்டும்.

பேக்கிங் சோடாவில் உள்ள ஹைட்­ரஜன் பெெராக்­ஸைட், வாயில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்­து­விடும். ஏனெனில் வாயில் உள்ள அமி­ல­மா­னது பக்டீ­ரி­யாக்­களின் வளர்ச்­சிக்கு ஏற்ற சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்தும். பேக்கிங் சோடாவை ஈர­மான டூத் பிரஷ்ஷில் தொட்டு, பற்­களை துலக்­கினால், வாய்த்துர்நாற்றம் நீங்­கு­வ­தோடு, பற்­களும் பளிச்­சென்று மின்னும்.

ஆப்பிள் சாப்­பி­டு­வதால், உடல் ஆரோக்­கியம் மேம்­ப­டு­வ­தோடு, வாயில் தங்கியுள்ள பக்­டீ­ரி­யாக்கள் அழிந்து, வாய்த்துர்­நாற்றம் நீங்கும். எனவே வாய்த் துர்நாற்றம் அதிகம் உள்ள ஆண்கள் மட்­டு­மின்றி பெண்­களும், தினமும் ஒரு ஆப்பிளை சாப்­பிட்டு வரு­வது நல்­லது.

மேலும் வாய் துர்­நாற்­றத்தைத் நீக்குவதற்கு தயிர் சிறந்ததொன்றாகும். வாய்த் துர்­நாற்­றத்­தினால் அதிகம் கஷ்­டப்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்தால், தொடர்ந்து ஆறு வாரங்கள் தயிரை சாப்­பிட்டு வந்தால் உரிய பலனைப் பெறலாம். விற்றமின் 'சி' அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் பக்­டீ­ரி­யாக்­களின் வளர்ச்­சியைத் தடுத்து, வாய் துர்­நாற்­றத்தைத் தடுக்கும். எனவே விற்றமின் 'சி' அதிகம் நிறைந்த உணவுப் பொருட்­க­ளான எலு­மிச்சை, ஆரஞ்சு மற்றும் கெரட் போன்றவற்றை உட்­கொண்டு வாருங்கள்.

வாய் வறட்­சி­யுடன் இருந்தால், பக்­டீ­ரி­யாக்கள் நன்கு வளரும். எனவே தொடர்ந்து தண்ணீர் குடித்­தால் வாய் ஈரப்­ப­தத்­துடன் இருப்­ப­தோடு, வாயில் இருக்கும் உண­வுத்­து­கள்கள் அனைத்தும் வெளி­யேற்­றப்­படும். தினமும் தவறாமல் 8 டம்ளர் தண்­ணீரைக் குடிப்பது சிறந்தது.

வாய் துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள், தினமும் சிறிது வேப்பிலையை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்குங்கள். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளும் வலிமையடையும்.
மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை முயற்சித்துப்பாருங்கள் உரிய பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.