சொந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு இந்தியா மீது குற்றம்சாட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே பறந்தபடி படம் பிடித்த இந்தியாவின் சிறிய ரக ஆளில்லா உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டின் உளவு பிரிவு தெரிவித்தது. ஆனால் இதை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் இந்திய உளவு விமானத்தை சுட்டதாக குற்றம் சாட்டிவரும் பாகிஸ்தான் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிஉள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான், தனது சொந்த நாட்டு உளவுவிமானத்தையே சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானமானது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் பயன்படுத்தியது என்றும், விமானம் சீனாவில் இருந்து வாங்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து தூதர் வாயிலாக இந்தியா பதிலளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.
இந்திய உளவு விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



