மாலைதீவு சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி பங்கேற்பு
மாலைதீவின் ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று (26) தலை நகர் மலேயைச் சென்றடைந்தார். சுதந்திர தின விழா இன்றிரவு 08.30 ஆரம்பிக்கப்படவிருந்தது. பிரித்தானிய சுல்தான் ஒருவரின் ஆளுகையின் கீழிருந்த மாலைதீவுக்கு 1965ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்து சமுத்திரத்தில் இலங்கையிலிருந்து சுமார் 700 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாலைதீவு 1192 தீவுகளைக் கொண்ட நாடாகும். ஆந்த நாட்டின் சனத்தொகை முப்பது இலட்சமாகும். மாலைதீவுக்கான தேசிய கீதத்தை உருவாக்கியவர் இலங்கையின் பிரபல இசை விற்பன்னர் பண்டிட் டபிள்யூ.அமரதேவ அவர்களாவர். அங்கு பயன்படுத்தப்படும் அரச கருமமொழியான திவெங் மொழி சிங்கள மொழியுடன் மிக நெருக்கமானதாகக் காணப்படுகின்றது. மாலைதீவில் இலங்கை ஜனாதிபதிக்காக இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந் நாட்டு ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமின் அப்துல்லா கசும் ஆகியோரிiபே சந்திப்பொன்றும் இடம்பெற்றது.







