குருநாகலில் விபத்து மூவர் பலி
குருநாகலில் ஜீப் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லவ பகுதியில் இடம்பற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, டொரிங்டன் சதுக்கத்திற்கு அண்மையில் பாடசாலை சேவை பேரூந்தொன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்களும் ஒரு ஆசிரியையும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களுள் 14 பேர் ஆண் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



