Breaking News

இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது பதற்ற நிலை

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் தற்போது மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டி நடைபெற்று வரும் மைதானத்தின் ஓர் அரங்கில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் மைதான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்கள், போத்தல்கள் வீசப்படுவதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த பதற்ற நிலைமையினால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. போட்டி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

பார்வையாளர் பகுதியில் இருந்த குழுக்களுக்கு இடையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.