Breaking News

பெல்ஜியம் மருத்துவமனைகளில் ரோபோட் வரவேற்பாளர்கள் அறிமுகம்

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ரோபோட்களை தங்களது பணிகளுக்கு வெவ்வேறு வகையில் பயன்படுத்தி வருகின்றன. 

அந்த வகையில் பெல்ஜியம் நாட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் ரோபோட்களை தங்களது வரவேற்பு பணிக்காக கொண்டு வந்துள்ளனர்.

ஓஸ்டெண்ட் மற்றும் லீஜ் நகரில் உள்ள மருத்துவமனைகளில் வரவேற்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரோபோட்கள் அறிமுகம் செய்துள்ளனர். மனித உருவிலான உதவியாளராக அந்த ரோபோட்கள் திகழ்கிறது.

14 செ.மீட்டர் உயரமுள்ள, சக்கர உதவியுடன் நகரும் தன்மையிலானது இந்த ரோபோட்கள். மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளது.

சுமார் 20 மொழிகளை புரிந்து கொண்டு இந்த ரோபோட்கள் பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 57 செ.மீட்டர் அளவிலான மற்றொரு ரோபோட்டையும் அதே நிறுவனம் உருவாக்கி உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 300 மருத்துவமனைகளில் உதவிக்காக ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.