இலங்கை - பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது நாள் போட்டி இன்று
இலங்கை - பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது நாள் போட்டி இன்று
இலங்கை அணிக்கும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கட் அணிக்கும் இடையிலான ஐந்து போட்டித் தொடர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டிகளின் மூன்றாவது போட்டி இன்று (19) நடைபெறுகின்றது. இரவு பகல் போட்டியாக நடைபெறும் இந்த ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று போட்டித் தொடரில் சம நிலையில் காணப்படுவதால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுவது போட்டித் தொடரில் முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.
விசேடமாக பாக்கிஸ்தான் அணிக்கு அடுத்த வருடம் நடைபெறும் சம்பியன் கிண்ண போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தப் போட்டித் தொடரில் வெற்றி பெறுவது அவசியமர்கும். எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு பாக்கிஸ்தான் அணி கடும் முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாக்கிஸ்தான் கிரிக்கட் அணி இதற்கு முன்னர் கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் 21 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் அதன் 99 ஆவது ஒரு நாள் போட்டியில் பாக்கிஸ்தான் அணி விiயாடவுள்ளது. இதுவரை நடைபெற்ற 98 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் 30 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. எனவே, இலங்கை அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுறது.
இன்று நடைபெறும் போட்டியில் பங்குபற்றும் அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என அணித் தலைவர் என்ஜலோ மத்தியூஸ் தெரிவித்தார்.
இலங்கை அணிக்கும் பாக்கிஸ்தான் அணிக்கும் இன்றைய ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது
நமது நிருபர்



