Breaking News

ரதுகல ஆதிவாசி மீது தாக்குதல்

ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சூதா வன்னியலத்தோ மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் அம்பாறை பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ரதுகல கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நீர் வழங்கல் முறைமை தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என ஆதிவாசிகளின் தலைவர் சூதா வன்னியலத்தோ தெரிவித்தார். 

இது சம்பந்தமாக தான் தொலைபேசி மூலம் ரத்மல்கஹ எல்ல பொலீஸ் காவலரணுக்கு தகவல் தெரிவித்த போது பொலீஸ் நிலையத்திற்கு சமூகமளித்து முறைப்பாடொன்றினைப் பதிவு செய்யுமாறு பொலீஸ் உத்தியோகத்தரொருவர் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்தார். இது சம்பந்தமாக தான் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்போதாக கூறிய பின்னரே பொலீஸார் வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

தாக்குதலுக்கு இலக்காகி அம்பாறை பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சூதா வன்னியலத்தோவின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். 
நமது நிருபர்