Breaking News

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்!

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கண்ணகியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டு வளவில் குளிப்பதற்காக சென்றபோது,  மு.பிரசாந்தன் என்ற இந்தச் சிறுவன் தவறி விழுந்துள்ளான். இந்த நிலையில், சிறுவனை மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்ததாகவும் எனினும் , சிறுவன் வழியிலேயே மரணமடைந்திருந்ததாகவும்  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.