செல்போன் பயன் படுத்தினால் கேன்சர் வரும்... ஷாக் தரும் ஆய்வு!
செல்போன்கள் பயன்படுத்துவதால் வள்ர்சிதை மாற்றங்கள், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்போன் மற்றும் அதன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக்கு ஆபத்து என்று ஒரு சாராரும், இல்லை என மற்றொரு சாராரும் தொடர்ந்து ஆய்வுகள் மூலம் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் செல்போன் பயன்படுத்துவதால் உடல் செல்களில் மாற்றம் ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.



