Breaking News

சாப்ளினாக மாறப் போகும் வித்யா பாலன்!

மலையாள இயக்குநர் ஆர்.சரத் இயக்கத்தில் இந்தியில் சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகை வித்யாபாலன். தன் வித்தியாசமான வேடங்களால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வித்யாபாலன். தற்போதும் இவர் வித்தியாசமான படமொன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதுவும் சார்லி சாப்ளினாக ஆண் வேடத்தில் நடிக்க. கமலின் அவ்வை சண்முகி உள்பட ஆண்கள் பெண் வேடமணிந்து நடித்த படங்கள் ஏராளம். தற்போது, பெண் ஆணாக வேடமிடும் புதிய முயற்சியில் இறங்க உள்ளார் வித்யாபாலன்.

காமெடி நடிகர் இந்திரன்ஸ் சார்லி சாப்ளினாக நடித்துள்ள படம் ‘புத்தனும் சாப்ளினும் சிரிக்குனு'. இப்படத்தில் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகனாக நடித்துள்ள இந்திரன்ஸ், இறுதியில் நடைஉடை பாவனை என அனைத்திலும் சார்லி சாப்ளினாகவே மாறி விடுவாராம்.