Breaking News

ஐ.நாவில் மஹிந்த, கோத்தபாய மீது போர்க்குற்ற அறிக்கை

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் நாட்டில் நல்லாட்சியை நிறுவமுடியுமா? என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டத்தின் கீழ் முதலாவது பிரசாரக்கூட்டம் இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய விமல் வீரவன்ச பட்டலந்த ஆணைக்குழு, பட்டலந்த சித்திரவதையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பிருப்பதாக கூறி அவருடைய சிவில் உரிமைகளை பறிக்க பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அவ்வாறான ஒருவருக்கு நல்லாட்சியை ஏற்படுத்தமுடியுமா? என்று வீரவன்ச கேள்வி எழுப்பினார். ஏதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்ற அறக்கையில் இரண்டு சிவிலியன்கள் மற்றும் 41 இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது. இந்த இரண்டு சிவிலியன்களும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் ஆவர் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.