Breaking News

யானைகளின் அட்டகாசத்தால் வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்கள் ஆர்பாட்டம்.

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பத்தரகட்ட கிராம மக்கள் கடந்த மூன்று மாத காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக சொல்லன்னா துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்து அமைதியான முறையில் தமது கண்டனத்தை தெரிவித்து இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செலகத்திற்கு முன்னாள் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டனர்

யானைகளின் அட்டகாசத்தால் தமது விவசாய பயிர்கள் ,வீடுகள் , வீட்டு பொருட்கள் போன்ற தமது உடமைகள் யானைகளால் சேதமாக்கப்படுவதாகவும் ,இதனால் தமது வாழ்வாதாரம் மற்றும் தமது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் தெரிவித்து இதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கூறி  இக்கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் , தமது கோரிக்கை அடங்கிய மகஜரினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ்சிடம் கையளித்தனர் .
( நியூ வற்றி அமிர்தகழி நிருபர் )