மியன்மார் வெள்ளப்பெருக்கினால் 27 பேர் உயிரிழப்பு, ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
மியன்மார் வெள்ளப்பெருக்கினால் 27 பேர் உயிரிழப்பு, ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
மியன்மாரில் ஏற்பட்டுள்ள பரிய வெள்ளப்பெருக்கினால் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 114,845 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜூலை மாதம் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி காரணமாக 12 பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களின் 42 நகரங்களில் வாழ்ந்த மக்கள் பாதிப்புக்குள்ளாகியதோடு வீடுகள், பயிர் நிலங்கள், புகையிரதப் பாதைகள், பாலங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்ததாகவும் சமூகநல, நிவாரண மற்றும் மீள்குடியேற்ற திணைக்களத்தினை மேற்கோள் காட்டி ஸின்ஹூவா செய்திச் சேவை சனிக்கிழமை தகவல் வெளியிட்டது.
காயின் மற்றும் மொன் மாநிலங்களிலும் பாகோ பிராந்தியத்திலும் மொத்தமாக 31 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
சின் மற்றும் றக்ஹீன் மாநிலங்களும் சகாயிங் மற்றும் மெக்வே பிராந்தியங்களும் அனர்த்தப் பிரதேசங்களாக வெள்ளிக்கிழமையன்று அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டன.
மியன்மாரின் பிரதானமான ஐந்து ஆறுகளான எய்யாவாடிஇ சின்ட்வின், தான்ல்வின், சிட்டோஉங் மற்றும் காவுன் ஆகியவற்றின் நீர்மட்டம் அபாயகரமான அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் இன்னும் இரு நாட்களில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் எனவும் வானிலைப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்கள்இ அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள் சில பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் ஏனைய நிவாரணங்களையும் வழங்கி வருகின்றன. எனினும் நிவாரணங்கள் மேலும் தேவைப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



