Breaking News

பெண்களின் மார்பகங்கள் வெடிகுண்டுகள் அல்ல - நிர்வாண ஆர்ப்பாட்டம்

கனடா நாட்டில் பொது இடங்களில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக சென்ற இளம்பெண்களை பொலிசார் ஒருவர் தடுத்தி நிறுத்தியதை கண்டித்து இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள Kitchener என்ற நகரில் தமீரா, நடியா மற்றும் அலைஷா முகமது என்ற இளம் சகோதரிகள் 3 பேர் கடந்த மாதம் சாலையில் மேலாடையின்றி சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். இதனை கவனித்த பொலிசார் ஒருவர் அவர்களை தடுத்தி நிறுத்தி கண்டித்ததோடு மட்டுமில்லாமல் மேலாடையை அணிய வற்புறுத்தியுள்ளார். பொலிசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் வாட்டர்லூ என்ற இடத்தில் மேலாடை இன்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘Bare with us’(எங்களுடன் நிர்வாணமாக போராடுங்கள்) என்ற பதாகைகளை ஏந்தியவாறு பொலிசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ’பெண்களின் மார்பகங்கள் ஒன்றும் வெடிகுண்டுகள் அல்ல. அவற்றை ஏன் பாலியல் ரீதியாக பார்க்கிறீர்கள்’ என போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கனடா நாட்டில் பெண்கள் மேலாடையின்றி பொது இடங்களுக்கு செல்வதை கடந்த 1996ம் ஆண்டு முதல் நீதிமன்றம் சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள பின்னரும், பெண்களை மேலாடையின்றி வெளியே செல்லக்கூடாது என பொலிசார் வற்புறுத்துவது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் பொலிசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சகோதரிகள் கூறும்போது, கடந்த மாதம் கோடை வெயில் தாக்கியதால் தான் மேலாடை இன்றி பயணித்தோம். ஆனால், பொலிசார் எங்களை தடுத்தி நிறுத்தியது கண்டிக்கத்தக்கது என்றனர். குவென் ஜாக்கப்ஸ் என்ற இளம்பெண் கடந்த 1991ம் ஆண்டு மேலாடை இன்றி வெளியே சென்ற குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டார். இந்த அபராதத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்ததை விசாரணை செய்த நீதிபதி ’மேலாடை இன்றி செல்வது என்பது ஒன்றும் இழிவானதோ அல்லது மனிதாபிமானமற்ற செயலோ அல்ல’ எனக்கூறி அபராதத்தை ரத்து செய்தார். நீதிபதியின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொது இடங்களில் பெண்கள் மேலாடை இன்றி செல்வதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பெண்கள் மேலாடையின்றி செல்வதை இனி பொலிசார் தடுக்க கூடாது என இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் இந்த வினோத போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.