Breaking News

ஹிருணிகாவிடம் 500 மில்லியன் கோருகிறார் கம்மன்பில

ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில தன்மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்பாட்டுக்காளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரனிடம் 500 மல்லியன் ரூபா கோரி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இரண்டு வாரத்தினுள் இந்தத் தொகையினைச் செலுத்தாவிட்டால் ஹிருணிகாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கம்மன்பில தெரிவித்தார். 'ஜூலை 2ஆந் திகதி ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து பின்னர் அப்பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என பொலீஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதாக ஹிருணிகா குற்றம் சாட்டினார். எனினும் இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. கழிவிரும்புத் திருட்டில் நான் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்' என அவர் தெரிவித்தார். கடந்த மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரச் செலவினம் தொடர்பான அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதென அவர் மேலும் குற்றம் சாட்டியதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்த அவர் அவை அனைத்தும் புனையப்பட்டவை எனவும் அடிப்படையற்றவை எனவும் தெரிவித்தார். கொழும்பில் போட்டியிடுவதற்கான அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட ஒருவரால் இவர் வழிநடாத்தப்படுவதால் ஹிருணிகாவுக்காக தான் பரிதாபப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பில் கருத்தத் தெரிவித்த அவர் மக்களிடம் நுறு ரூபா கோருவது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாக காணப்பட்டாலும், கிடைத்த நிதியைக் கொண்டு சாமாளித்ததாகத் தெரிவித்தார். 
எம்.ஐ.அப்துல் நஸார்