மகாலட்சுமி சிலைக்கு பின்னால் Topless ஆக நின்று செல்பி எடுத்த கிறிஸ்டினா அகுலியேரா...!
அமெரிக்கப் பாடகி கிறிஸ்டினா அகுலியேரா டாப்லெஸ் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அது இந்தியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம். மகாலட்சுமி சிலைக்கு பின்புறம் நின்றபடி டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் கிறிஸ்டினா. இந்த டாப்லெஸ் செல்பியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள கிறிஸ்டினா, அதில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். எல்லாமே ரியல்தான். எப்போதுமே ரியல்தான். எனது தனிப்பட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அதனால்தான் இந்தப் படம். இது ஆரம்பம்தான்.. குட்நைட் என்று கூறியுள்ளார் கிறிஸ்டினா.
இதுதான் ஆரம்பம் என்று அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் இன்னும் பல பலான, பலே படங்களை அவர் போடுவார் போலத் தெரிகிறது. கிறிஸ்டினாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் தனது உடல் அழகை அவர் தொடர்ந்து கவனத்துடன் பேணி வருகிறாராம். அதையும் அவ்வப்போது அவரே சொல்லிக் கொள்கிறார். எல்லாம் சரி. அது எதுக்கு மகாலட்சுமி படத்துக்குப் பின்னாடி நின்று இப்படி ஒரு படம்...?