மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு விசேட திருப்பலி
மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு 29.08.2015 சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் விசேட திருநாள் திருப்பலிஒப்புக்கொடுக்கப்படவுள்ளது .
ஆலய திருவிழா கடந்த 21.08.2015 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலை அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது.
29.08.2015 சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் விசேட திருப்பலியும் ,புதுநன்மை ,உறுதிப்பூசுதல் ஆகிய தேவதிரவிய அருள் அடையாளங்கள்வழங்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன் அன்னையின் திரு உருவம் பவணி வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில்விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
(அமிர்தகழி நிருபர் )





