செவ்வாய்கிரகத்தில் பாறை மீது பெண் நிற்பது போல் உருவம்
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்த புகைப்படங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர்கள் ஓவ்வோரு முறையும் ஏதாவது உருவங்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அங்கு பாறை மீது ஒரு பெண் நிற்பது போல் உருவம் இருப்பதாக கூறி உள்ளனர்.
ஓரளவுக்கு அது பெண் நிற்பது போலவே உள்ளது. பெண்ணின் மார்பகங்கள் போன்றே அந்த உருவத்திற்கு உள்ளது. அதன் மார்பு பாகங்கள் நிழலில் தெரிகிறது.அது ஒரு பெண்ணின் சிலை போன்ற அமைப்பை கொண்டு உள்ளது. என்று கூறி உள்ளனர்.
* செவ்வாய் கிரகத்தின் பாறைகளுக்கு இடையில் நண்டு இருப்பது போன்று ஒரு தோற்றம் இருப்பதாக கூறினர்
* எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிட்டு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்தது என தெரிவித்தனர்.
* செவ்வாயில் எலும்பு துண்டு ஒன்று கிடந்தது போல் ஒரு உருவம் தெரிந்ததாக கூறினர்
* இப்பொழுது ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல ஒரு உருவம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.



