Breaking News

வக்ஷ்மன் வசந்த பெரேராவுக்கு பிணை - நீதிமன்றத்தால் கடும் நிபந்தனை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் தசநாயக்கவை கடத்திச் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் வக்ஷ்மன் வசந்த பெரேராவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பத் கமகே உத்தரவிட்டார். இரண்டரை இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டார்.  இது சம்பந்தமான ஊடக சந்திப்புகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது எனவும் நீதவான் நீதிமன்ற நீதிபதி கடுiமான எச்சரிக்கையின விடுத்தார். 
எம்.ஐ.அப்துல் நஸார்