Breaking News

வாலு பட தாமதத்திற்கு "மெய்யாலுமே" யார் காரணம் தெரியுமா...??

வாலு படம் வெளிவர தாமதமானதற்கு முக்கியக் காரணம் நான் தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.‘வாலு' படப் பிரச்சினையின் மூலம் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள படம் ‘வாலு'. பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்நிலையில், பாஸ்கியின் ‘பாஸ்கி டிவி' என்ற யூடியூப் சேனலுக்கு சிம்பு பேட்டியளித்துள்ளார். அதில் வாலு படம் தொடர்பாக தான் சந்தித்த பிரச்சினைகளை அவர் விவரித்துள்ளார். அப்பேட்டியில், ‘வாலு' திரைப்படம் வெளிவர தாமதமானதற்கு நீங்களும் ஒரு வகையில் காரணம் இல்லையா? எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலாவது:-

நான் தான் காரணம்... முக்கியமான காரணம் நான் தான். இங்கே என் வெற்றிக்கான எல்லா விஷயங்களையும் நான் தான் செய்ய வேண்டும். என்னை எதிர்பார்ப்பவர்களுக்கான வேலையை நான் செய்ய வேண்டும்.