Breaking News

கிளம்பிட்டாங்கப்பா.. ராதே மா "வரலாறு" படமாகிறது.. நடிக்கப் போவது "மல்லிகா மா"...!

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா வைத்து படம் பண்ண சிலர் கிளம்பியுள்ளனர். ராதே மா வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கப் போகிறாராம். வட இந்தியாவைக் கலக்கி வரும் பெண் சாமியார் ராதே மா. இவர் குறித்து செய்தி வராத நாளே இல்லை இப்போது. இவரைப் பற்றி ஒரு செய்தியாவது தினசரி வந்து விடுகிறது. வரதட்சணைக் கொடுமைப் புகார், பக்தர்களைக் கட்டிப்பிடிப்பது, முத்தமிட அனுமதிப்பது, தூக்க அனுமதிப்பது, கவர்ச்சி டிரஸ் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடுவது என சர்ச்சைகளாக வந்து கொண்டுள்ளன.

ஆம்பளை சாமிக்கு இவர் பரவாயில்லையே பாஸ்! ஆனால் பல ஆண் சாமியார்கள் செய்யும் அராஜக அட்டகாசத்தைப் பார்க்கும்போது இவர் எவ்வளவோ தேவலை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் "பெண்" ஆச்சே... "சமுதாயம்" அபச்சாரம் அபச்சாரம் என்றுதானே சொல்லும்