மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக்கூட பெயர்ப் பலகைக்கு 1,66,000 (20,000)
20ஆயிரம் ரூபாயில் நிறைவு செய்திருக்க கூடிய மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட பெயர் பலகைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியின் போது 1,66,000 ரூபாய் செலவிடுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதென விசாரணை மேற்கொள்ளபடுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் என்ற பெயருக்கு பதிலாக பாடசாலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் என அதே அளவிலான பெயர்ப் பலகைக்கு 100 நாள் அரசாங்கத்தினால் 20,000 ரூபாய் மாத்திரே செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வளவு குறைந்த பணத்தில் பெயர் பலகை ஒன்றினை நிறைவு செய்ய கூடியபோது 1,66,000 ரூபாய் என்ற இவ்வளவு பெரிய தொகையினை யாருடைய அனுமதியுடன் செலவிடப்பட்டதென ஆராய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஒரு பெயர் பலகைக்காக 1,46,000 ரூபாய் அதிகமாக செலவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் 1000 அமைக்கும் திட்டமொன்று கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.