Breaking News

"காதல்" சந்தியா இப்போ குத்தாட்ட சுந்தரி!


கத்துக்குட்டி படம் மூலமாக குத்தாட்டத்தில் குதித்துள்ளார் "காதல்" நாயகி சந்தியா. காதல் படத்தில் நாயகியாக அறிமுகமாகி சில பல படங்களில் நடித்து பின்னர் காணாமல் போன சந்தியா கத்துக்குட்டி படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார். ஆனால் இந்தப் பாட்டில் அவர் படத்தின் நாயகன் நரேனுடன் ஆடவில்லை. மாறாக சூரியுடன் ஆட்டம் போட்டுள்ளார். அதி அமைதி நாயகியாக அறியப்பட்ட சந்தியா, இப்பாடலில் அதி வேக குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் உள்ளது.