Breaking News

சிவா நல்லா இருக்கீங்களா? சிவகார்த்திகேயனுக்கு கபாலி ஆறுதல்.

சிவா.. நல்லா இருக்கீங்களா? சிவகார்த்திகேயனுக்கு கபாலி ஆறுதல் 

நேற்று முன் தினம் சில மர்ம நபர்களால் மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன்தாக்கப்பட்டார். அதன்பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்த சிவகார்த்திகேயன் கமல் மற்றும் ஹன்சிகாவும் திருச்செந்தூரிலுள்ள ஆதித்தனார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன், தான் நலமாக உள்ளதாகவும் ஆதரவளித்த அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவத்தை அறிந்த ரஜினிகாந்த்,சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது “சிவா… நல்லா இருக்கீங்களா? கவனமா இருங்க. பொது இடங்களுக்கு போவதை கொஞ்சம் குறைச்சுக்குங்க’என்று அட்வைஸ் செய்தாராம். இதனிடையில் சிவகார்த்திகேயனை தாக்கியது கமல் ரசிகர்கள் என ஒருபுறம் கூறப்பட்டு வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன். கமல் வசனத்தை தன் படத்தில் கிண்டலாக பேசியதாலும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதாலும் கமல் ரசிகர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினி சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு பேசியுள்ளதால் இந்த விவகாரம் இன்னும் நீளும் எனத் தெரிகிறது.