Breaking News

எமது நாட்டில் நிலையான அபிவிருத்தியில் ஒவ்வொரு கிராமும் ஒவ்வொரு நகரமும் பங்களிப்பு செய்வதன் ஊடாகவே எமது நாடு நிலையான அபிவிருத்தியினை அடையும்

எமது நாட்டில் நிலையான அபிவிருத்தியில் ஒவ்வொரு கிராமும் ஒவ்வொரு நகரமும் பங்களிப்பு செய்வதன் ஊடாகவே எமது நாடு நிலையான அபிவிருத்தியினை அடையும் எனும் தொனிப்பொருளின்  மட்டக்களப்பு மாவட்ட தேன் சிட்டு அமைப்பின் தலைவர் எம் .ஜனணன் தலைமையில் 03வது கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது .

எமது மாவட்டத்தில் சில பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு அக்கிராமங்களில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக  அப்பகுதி இளைஞர் யுவதிகளை அழைத்து அவர்களை ஆளுமை  விருத்தி உள்ளவர்களாக மாற்றும் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தேன் சிட்டு அமைப்பின் முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்திட்டத்தில்  03வது கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது .

இக்கருத்தரங்கில் வளவாளர்களாக  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ் . சதுர்முகம் , மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்  பி .மனோகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)