Breaking News

கிளிநொச்சியில் ஜனாதிபதியை வரவேற்ற வடக்கு முதல்வர் சீ.வீ. விக்னேஸ்வரன்

கிளிநொச்சியில் ஜனாதிபதியை வரவேற்ற வடக்கு முதல்வர் சீ.வீ. விக்னேஸ்வரன்

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.

கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதம அதிதியாக நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியை வட மாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து வட மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் பங்கேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.