கோழி முட்டை போட்டு பார்த்திருப்பீங்க, ட்வீட் செய்து பார்த்திருக்கீங்களா?
ஆஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்று கோழிக்கு ட்வீட் செய்ய கற்றுக் கொடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிக்கன் ட்ரீட் என்ற பாஸ்ட் புட் உணவகம் கோழி ஒன்றுக்கு கம்ப்யூட்டர், கீ போர்ட், இன்டர்நெட் இணைப்புடன் ட்விட்டரில் கணக்கு துவங்கி கொடுத்துள்ளது. தனியாக ஒரு கூண்டில் இருக்கும் அந்த கோழிக்கு பெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். பெட்டி கீ போர்டில் ஏறி நின்று பட்டனை அழுத்துகிறது. உடனே ட்விட்டரில் ட்வீட்கள் வருகின்றது. தற்போது பெட்டி ஏதேதோ பட்டன்களை அழுத்தி வருகிறது. பெட்டி 5 ஆங்கில எழுத்துகள் கொண்ட வார்த்தையை டைப் செய்யும் வரை அதை ட்வீட் செய்ய வைக்க உள்ளனர். j;l . olk tfrcdw/////////////////////////////////////////////////////////////////////// #chickentweet — Chicken Treat (@ChickenTreat) October 16, 2015 பழகப் பழக பெட்டியால் ஆங்கில வார்த்தையை டைப் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. கின்னஸ் சாதனை படைக்கவே கோழியை ட்வீட் செய்ய வைத்துள்ளனர். தற்போது பெட்டிக்கு கீ போர்ட் என்னவென்று தெரியாமல் அதை அசுத்தம் செய்து வருகிறது. அது என்னை செய்தாலும் சரி, ட்வீட் செய்யும் முதல் கோழி பெட்டி தான்.


