20 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் -ஒரு பண்ணையாளருக்கு தலா 20 கோழிக் குஞ்சுகள் வீதம் 400 கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு-படங்கள்
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேற்படி கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனினால் தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கோழிக் குஞ்சுகள் பீ.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 20 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் ஒரு பண்ணையாளருக்கு தலா 20 கோழிக் குஞ்சுகள் வீதம் மொத்தமாக 400 கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











