Breaking News

மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யயா மகளிர் அறபுக் கல்லூரியின் ஏற்பாட்டில்-அறபு மொழி தின விஷேட நிகழ்வு-படங்கள்




-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி- மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யயா மகளிர் அறபுக் கல்லூரி ஏற்பாட்டில் 2015 சர்வதேச அறபு மொழி தினம் முன்னிட்டு விஷேட நிகழ்வொன்றினை மஃஹத் வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2015-12-18 மாலை நடாத்தியது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க். எம்.ஐ. அப்துல் கபூர் (மதனி) கலந்து கொண்டு 'அறபு மொழியும் அதன் முக்கியத்துவமும்' எனும் தலைப்பில் உரையாற்றியதோடு விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயலாளர். அஷ்ஷெய்க் எஸ்.எம்.கே.ஜாபிர் (நளீமி) சர்வதேச அறபு மொழி தினம் தொடர்பான கருத்துரை ஒன்றினையும் வழங்கினார்.

இதன் போது அதிதிகளினால் சர்வதேச அறபு மொழி தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரியின் ஆசிரியர் குழாம் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.