2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதில் 16 திருத்தங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் டிலான்பெரேரா.
எதிர் வரும் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டதில் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் முன்வைத்த 16 திருத்தங்களுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, பைசர் முஸ்தபா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். வங்கிகளில் இருந்து பணத்தை மீளப்பெறும் போது, அறவிடப்படுகின்ற வரியை நீக்குதல் உள்ளிட்ட 16 திருத்தங்களை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
-A.D.ஷான்-





