கிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான பயிற்சி பட்டறை மட்டக்களப்பில்.
கிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான சர்வதேச தபால் பொதிகள் பரிமாற்றம் தொடர்பாக அறிவூட்டும் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் சர்வதேச தபால் பொதிகள் பரிமாற்றம் தொடர்பாக கணணி வலையமைப்பின் நடைமுறையாக ஐ.பி.எஸ்.லைட் எனப்படும் மென்பொருளில் இருந்து மேலும் பல மாற்றங்களை உட்படுத்தி புதிய தகவல் தொழில் நுட்பத்தை ஐ.பி.எஸ்.போஸ்ட் எனப்படும் மென்பொருள் நடைமுறை தொடர்பான அஞ்சல் அதிபர்களுக்கான அறிவூட்டும் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியால பிரதம அதிகாரி எ .சுகுமாரனின் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபதி வி.விவேகானந்த லிங்கம் தலைமையில் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு தலைமையக தபால் திணைக்கள சர்வதேச தபால் சேவைகள் உதவி அத்தியட்சகர் ஐ.வி.நாவலகே மற்றும் தொழில் நுட்ப குழு உறுப்பினர்களான கல்கர பெரேரா, அஸ்மி மற்றும் கிழக்கு மாகாண தபால் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகள் ஆகியோர் அஞ்சல் அதிபர்களுக்கான அறிவூட்டும் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர்.



