நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்
நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே.
அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் வெளியான பாஜிராவ் மஸ்தானியும் ரூ.50 கோடி வசூலை தாண்டி ரூ.100 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இயக்குனர் கதையை கூறும்போது அது எனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பேன். நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நானாக தான் முடிவு செய்வேன். அது வெற்றியோ, தோல்வியோ என்னுடயை பயணமாக இருக்க வேண்டும். பிறரின் முடிவுகளை நம்ப மாட்டேன்.



