ஷங்கருக்கு தேதி கொடுக்கும் முன் யோசிக்கச் சொன்னார்கள் நலம் விரும்பிகள்!- எமி ஜாக்ஸன்
ஷங்கர் படங்கள் என்றாலே முடிய ரொம்ப நாள் பிடிக்கும்... எனவே மீண்டும் அவர் படத்தில் நடிக்கும் முன் யோசிக்குமாறு நண்பர்கள் கூறினார்கள் என்று எமி ஜாக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர் எமி ஜாக்ஸன். அந்தப் படத்துக்காக 200 நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்திருந்தார்.
ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்ஸன்
இப்போது மீண்டும் ஷங்கர் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள முடிவு செய்த போது, என் நலம் விரும்பிகள் எதற்கும் ஒரு முறை யோசிக்குமாறு கேட்டார்கள்.



