நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய எரிவாயு டேங்கர்- 100 பேர் பரிதாப பலி
நைஜீரியாவில் சமையல் எரிவாயு டேங்கர் ஒன்று வெடித்ததில் 100 பேர் பரிதாபமாக பலியானார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளதென அஞ்ச படுகின்றது.
தென்கிழக்கு நைஜீரியாவில் சமையல் எரிவாயு தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
"கூலிங் டைம்" எனப்படும் வெப்பநிலை குறைவதற்குக் கட்டாயமாகக் காத்திருக்க வேண்டிய நேரத்தை அலட்சியப்படுத்திய சரக்கு வாகனம், சமையல் எரிவாயுவை மாற்றிவிடத் தொடங்கியதே வெடிப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்கு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.



