மாயாவைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா
மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அதே போன்று ஒரு கதையில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த 2015ம் வருடம் தமிழ்த் திரையுலகினருக்கு மோசமாக அமைந்த போதிலும் நயன்தாராவுக்கு நல்லதொரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது. இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் வரிசையாக வெற்றி பெற்றன.இதனால் ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்து நயன்தாராவுக்கு கிடைத்தது.



