Breaking News

ஜெர்மன் நாட்டின் தூதுக்குழுவினர் கிழக்கு முதலமைச்சருடன் சந்திப்பு வெருகலில் தொழில் பயிற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல்.

வெருகலில் புதிய தொழில் பயிற்சி நிலையமொன்றை உடனடியாக அமைக்க வேண்டும் போன்ற பல ஆக்கபூர்வமான ஜோசனைகளுடன் ஜெர்மன் நாட்டின் தூதுக்குழுவினர் இன்று முதலமைச்ரை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதன் போது கிழக்கு மாகாணத்தின் வெருகலில் புதிய தொழில் பயிற்சி நிலையமொன்றை உடனடியாக அமைப்பதற்கும் கிண்ணியா , கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்வதுடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்துக்கு கிழக்கு மாகாண இளைஞர்களை உள்வாங்கி அங்கு தொழில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் நூலகங்களையும் மற்றும் பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவினை அபிவிருத்தி செய்வதற்கும் தம்மால் உதவிகள் வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது .

அத்துடன் கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் ஜெர்மன் நாட்டு தூதுக் குழுவினர் முதலமைச்சரிடம் தெரிவித்தனர் .