பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்ம வாகனத்தால் பரபரப்பு !! ஊழியர்கள் வெளியேற்றம் !
லண்டன் பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்மமான வாகனத்தால் பரபரப்பு நிலவியது. இதனால் பிபிசி தலைமை அலுவல கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிபிசி செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த பகுதியில் இன்று மதியம் மர்மமான வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வாகனத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதியில் பிபிசி அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.



