சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்-படங்கள்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06 தாருஸ் ஸலாம் வீதியில் வசிக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் 15-12-2015 இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
28.9.1970 ஆண்டு பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை புதிய காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பயின்றார்.
ஊடகத்துறையில் பிபிசியினால் நடாத்தப்பட்ட விஷேட ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த இவர் அரச சேவையில் 1998 ம் ஆண்டு சமுர்த்தி ஊக்குவிப்பாளராக தனது நியமனத்தைப் பெற்று அதற்குப் பின்னர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகவும்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோதர்தர் தரம் ஒன்றிலும் கடமையாற்றி தற்போது வாழ்வின் எழுச்சி திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.
பல பட்டி மன்றங்களிலும் பல பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையினால் நடாத்தப்பட்ட சாஹித்திய விழாவில் ஊடகச் சுடர் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அச்சு இலத்தரனியில் ஊடகத்துறையில் தற்போது சிரேஷ்ட ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாகவும், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவராகவும்,உப தலைவராகவும்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உறுப்பினராகவும் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியோ போரம்,காத்தான்குடி மீடியா போரம் ஆகிய ஊடக சங்கங்களின் உறுப்பினராகவும், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவை உறுப்பினராகவும், சுதந்திர ஊடக இயக்கத்தின் உறுப்பினராகவும் ,தெற்காசிய ஊடக சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவர் ஆயுர்வேத வைத்தியர் மர்ஹ_ம் முஹம்மது சரபுத்தீன் மற்றும் ஜனாபா சீனி முஹம்மது சைனம்பு ஆகியோரின் புதல்வருமாவார்.



