சமுதாய அமைப்புக்களை பலப்படுத்தும் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி நெறி
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுதாய அமைப்புக்களை பலப்படுத்தும் தொடர்பான பயிற்சி நெறி இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
மண்முனை வடக்கு சமுதாய அமைப்புக்களை பலப்படுத்தும் முகமாக மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும முகாமையாளர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா வழிகாட்டலுக்கு அமைவாக மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி .குணரட்ணம் தலைமையில் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
இன்று ஆரம்பமான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திவிநெகும முகாமையாளர் ஜெ. எப் மனோகிதராஜ் , கோரளைப்பற்று மத்தி திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் எம் .எஸ் .எஸ் . பசிர் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இன்று இடம்பெற்ற பயிற்சி நெறியின் போது தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்தியில் பொருட்டான தொழில் முயற்சி , வாழ்வாதார அபிவிருத்தியினை அறிமுகப்படுத்தல் , சுயதொழில் வருமானம் ஈட்டும் கருத்திட்டம் , சமூக மட்ட பிரதி நிதிகளுடன் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்ற பல்வேறு பட்ட தொழில் வழிகாட்டல்கள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்கள் இனம் கண்டுகொள்ள என்பது தொடர்பான பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டது .



