Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கான ஒலி பெருக்கிகள் வழங்கும் நிகழ்வு

கல்வி அமைச்சு  மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக ஏற்பாட்டில்  பாலர் பாடசாலைகளுக்கான  மினி ஒலி பெருக்கிகள் வழங்கும் நிகழ்வு  மாகாண பாலர் பாடசாலை பணியக பணிப்பாளர்  பொன் செல்வநாயகம்  தலைமையில் மட்டக்களப்பு மண்முனை  வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  இன்று இடம்பெற்றது .  

  
இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  கலந்துகொண்ட  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்  கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பாலர் பாடாசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள   71  முன்பள்ளி பாடசாலைகளுக்கு மினி ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில்  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  


தமிழ் பிரதேசங்களிலே ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், யுத்தம் இடம் பெயர்வு, இராணுவ ஆக்கிரமிப்புக்கள் அச்சத்தினால் வெளிநாடுகளுக்கு இளைஞர் யுவதிகள் சென்றமை போன்ற காரணங்களும் இங்கு முக்கிய காரணங்களாகும். எங்களது வாழ்க்கையை செம்மையாக்குவதற்கு கல்வி ஒரு பிரதானமான கருவியாக இருக்கின்றது.


கல்வியில்லாத வாழ்க்கையில்லை. சமூகம் சார்ந்த வகையிலும் சரி பொருளாதாரம் சார்ந்த வகையிலும் சரி கல்வி எங்களுக்கு ஒரு ஆயுதமாக இருக்கின்றது. கல்வி மீது ,ளைஞர்களும் யுவதிகளும் கரிசணையாக இருக்க வேண்டும். கல்வி எங்களது பெரும் சொத்து எங்களிடமிருந்து அழிக்க முடியாத ஒரு சொத்து எங்களது வீடு வாசல் அழிக்கப்படலாம். பறிக்கப்படலாம். எங்களது வாகங்கள் சொத்துக்கள் அழிந்து விடலாம். ஆனால் எங்களிடமிருந்து கல்வியை அழிக்க முடியாது. அழிக்க முடியாத சொத்தாக கல்வியைத்தான் கொண்டுள்ளோம்.


ஆகவே கல்வியை கருவியாக கொண்டு அழிந்து போன எங்களது வாழ்க்கையை பிரதேசங்களின் அபிவிருத்தியை எங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எங்களின் கைவசமிருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வியாகும்.


எங்களது கிழக்கு மாகாண சபை எமது மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளை வளர்க்க வேண்டும் என்ற அக்கறையுடன் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முன்பள்ளிகளுக்கு பல உதவிகளை செய்துள்ளார்கள். பல ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியர்கள் எந்தவித கொடுப்பனவுமின்றி பணியாற்றி வருகின்றார்கள்.


இவர்களின் நன்மை கருதி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர் வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கிழக்கு மாகாணத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க எமது கிழக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது.


அது தொடர்பான தீர்மானத்தை கிழக்கு மாகாண சபையின் கடந்த அமைச்சரவையில் தீர்மானித்துள்ளோம் அதற்கான ஓர் அமைச்சரவை பத்திரத்தை நான் சமர்ப்பித்து அது அங்கிகரிக்கப்பட்டுள்ளது.


இந்த 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை எடுத்து வருகின்றோம். கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகம் இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. சில முன்பள்ளி ஆசிரியர்கள் கொடுப்பனவை பெறுகின்றார்கள். கொடுப்பனவு பெறாத ஆசிரியர்களின் விபரம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றுள்ள தகமைகள் என்பன போன்ற விபரங்களை கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகம பெற்றுவருகின்றது.


எமது முன்பள்ளி ஆசியர்களில் சிலர் குறைந்த பட்ச கல்வித்தகமைகளை கொண்டிராதவர்களும் இருக்கின்றார்கள். முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி தகமையுள்ளவர்களாக மாற வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதரப் சாதரண தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் ஆகிய தகமைகளை இப்போதே பெற்றுக் கொள்ள முயலவேண்டும். ஏதாவது உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது இந்த கல்வித்தகமைகள் உங்களை விடுவிக்கும். எவ்வாறாயினும் 3,500 முன் பள்ளி ஆசிரியர்களுக்கு இக் கொடுப்பனவை வழங்கப்படும்.சேவைக்காலத்தை அடிப்படையாக கொண்டு இவர்களுக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.


எதிர் வரும் ஜனவரி மாதத்திலிருந்து இந்தக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாகும் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்  சி . தண்டாயுதபாணி    மற்றும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  கே . துரைராசசிங்கம் ,  கிழக்கு மாகாண பிரதி தவிசாளரும் மாகாணசபை உறுப்பினருமான  என் . இந்திரகுமார் பிரசன்னா . கிழக்குமாகாண சபை உறுப்பினர் இரா துரைரெத்தினம் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராசா , பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்  கே . சித்திரவேல் , மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்  மற்றும்   கல்வி அதிகாரிகள்  ,பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .