கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது.
நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறையாக தோற்றவிருந்த பரீட்சார்த்தியொருவருக்கு பதில் போலியாக தோற்றிய நபர் ஒருவர் கண்டி பகுதியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 20 வயதான இளைஞன் ஒருவரே கண்டியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்தமை, மற்றுமொருவர் சார்பாக பங்குபற்றி மோசடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உண்மையிலேயே பரீட்சைக்குத் தோற்றவேண்டிய நபர் குறித்தும் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



