Breaking News

பேஸ்புக் மீதான தடை வங்காளத்தில் நீங்கப்பட்டுள்ளது அத்துடன் எல்லா சமூக வலைதளங்களுக்கும் அனுமதி !

வங்காளதேசத்தில் அனைத்து சமூகவலை தளங்கள் மீதும் நிலவி வந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சமூக வலைதளங்களை உபயோகிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்கு தண்டனையை முன்னிட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருந்தது. அதற்காக கடந்த மாதம் 18-ம் தேதி முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் ஆகிய சமூக வலைதளங்களை வங்கதேச அரசு முடக்கியது. 

இந்நிலையில், பேஸ்புக்கிற்கான தடையை 21 நாட்களுக்கு பிறகு கடந்த 10 ஆம் நீக்கியது வங்கதேசம். இந்நிலையில் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப், ட்விட்டர் போன்ற அனைத்து சமூகவலை தளங்கள் மீதான தடைகளும் கடந்த திங்கள் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.