Breaking News

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 பொதுச் சபைக் கூட்டம்.

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 18-12-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் சென்ற கூட்டறிக்கையை வாசித்தல்,ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்,வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பித்தல்,பாடசாலை முன்னேற்ற அறிக்கை,யாப்பில் திருத்த வேண்டிய விடயங்கள்,சிறப்புரை,புதிய உத்தியோகத்தர் தெரிவு,புதிய தலைவர் தெரிவு,புதிய செயலாளர் தெரிவு போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளர் எம்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தெரிவித்தார்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-