Breaking News

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு- கவியருவி விருது வழங்கி கௌரவிப்பு.

தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் மலேசிய எழுத்தாளர் சங்கமும்இகனேடிய படைப்பாளிகள் உலகமும்இ தடாகம் கலை இலக்கிய வட்டத்ததுடன் இணைந்து நடாத்திய விருது விழாவில் கவியருவி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கடந்த 15 செவ்வாய்க்கிழமை திருகோணமலை சண்சைன் மண்டபத்தில தடாகம் அமைப்பாளர் தமிழ்மாமணி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற விழாவில் கனேடிய படைப்பாளிகள் உலக தலைவர் கவிஞர் ஐங்கரன் விருது வழங்குவதையும் ,மகுடம் பிரதம ஆசிரியர் தமிழ்மணி வீ.மைக்கல் கொலின் மாலை அணிவிப்பதையும் அருகில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் கவிஞர் ராஜேந்திரன் உட்பட அதிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-