கிளிநொச்சியில் பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில்பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு கோரி கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில் கடவையினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உரிய பாதுகாப்பு கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு கடவைகளை அமைப்பதுடன், கடவைகளில் பாதுகாவலர்களை நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
-A.D.ஷான்-
-A.D.ஷான்-



